ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவன் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்ச்சி

ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவன் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்ச்சி

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சோழன் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியின் ஆசிரியர் திட்டியதாக கூறி, ரகு என்ற 10 ஆம் வகுப்பு மாணவன், பள்ளிக் கட்டிடத்தின் மீது ஏறி கிழே குதித்துள்ளான். இதில் பலத்த படுகாயமடைந்த மாணவனுக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கண்டிப்பு என்ற பெயரில் மாணவர்களை திட்டுவதாகவும், அடிப்பதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேப்போல் கடந்த ஆண்டு ஆசிரியை அடித்ததில் ஒரு பள்ளி மாணவி மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


User: Sathiyam TV

Views: 2

Uploaded: 2018-07-17

Duration: 01:03

Your Page Title