தூத்துக்குடி - சிவகளை கிராமத்தில் ஆதி மனிதன் வாழ்ந்தற்கான பல ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி - சிவகளை கிராமத்தில் ஆதி மனிதன் வாழ்ந்தற்கான பல ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

ஸ்ரீவைகுண்டம் தாலுகா சிவகளை கிராமத்தில் ஆடு மேய்த்தவர் கூறிய தகவலின்படி, வரலாற்று பட்டதாரி ஆசிரியர் மாணிக்கம் என்பவர் தனது பள்ளி மாணவர்களுடன் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டார். அப்போது இதுவரை இந்த உலகிற்கு வெளிவராத பல வரலாற்று உண்மைகள் தெரியவந்துள்ளது. அந்த கிராமத்தை சுற்றி என்ன உள்ளது அதன் சிறப்பு என்ன என்பதை கூட இத்தனை காலமாக பொதுமக்கள் பார்க்காமல் இருந்துள்ளனர். சிவகளை பரும்பு பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளபில் ஆய்வு மேற்கொண்ட போது, ஆதி மனிதன் வாழ்ந்தற்கான அடையாளங்கள் பல இருப்பதை கண்டு, வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் குழுவினர் ஆச்சரியமடைந்தனர். ஆய்வில், அந்த பகுதியில் உள்ள சாஸ்தா கோவில் குளக்கரையில் உள்ள மூன்று நடுகற்கள், சுண்ணாம்பினால் செய்யப்பட்ட முதுமக்கள் தாழிகள், பண்டைய தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள், மேடான பகுதியில் மேட்டுக்குடி மக்கள் வாழ்ந்த இடங்கள், கற்சிலைகள், பண்டைய நாகரீக கோவில்கள் ஆகியவற்றை காண முடிந்தது. ஆதி தமிழர்கள் வாழ்ந்த நாகரிகம் மண்ணோடு மண்ணாக போகாமல் அரசு துரித நடவடிக்கை எடுத்து, சிவகளை பரும்பு பகுதியில் மிகப் பெரிய அளவில் வரலாற்று மற்றும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு, அகழ்வராய்ச்சி செய்தால் பல உண்மைகள் வெளியில் வரும் என்று ஆசிரியர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.


User: Sathiyam TV

Views: 31

Uploaded: 2018-07-17

Duration: 01:27