காதலிக்காத நீயெல்லாம் இருந்து என்ன பயன்...காதலன் வெறிச்செயல்...வீடியோ

காதலிக்காத நீயெல்லாம் இருந்து என்ன பயன்...காதலன் வெறிச்செயல்...வீடியோ

காதலிக்க மறுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு… br br கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் ஆத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சுவாமிதாஸ் இவரது மகள் சஜினா இவர் குளச்சலில் உள்ள லெட்சுமிபுரம் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கிய பட்டப்படிப்பு படித்து வருகிறார் இவரை அதே கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வரும் வெள்ளிச்சந்தை பகுதியை பாலகிருஷ்ணன் மகன் விக்னேஷ் என்பவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. காதலிக்க மறுத்த மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் விக்னேஷ் மீது முறையிட்டுள்ளதாகவும் தெரிகிறது இதனால் விரக்தியடைந்த விக்னேஷ் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் சஜினா நின்று கொண்டிருந்தபோது நண்பர்கள் சுதன்,ராஜாசிங் ஆகியோருடன் வந்த விக்னேஷ் என்னை காதலிக்காத நீயெல்லாம் இருந்து என்னபயன் என்று கூறி சஜினாவை தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறி சஜினா கீழே விழ உடன் வந்த தோழி நதியா அவரை பிடிக்க முயன்ற போது அவரையும் மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரும் முன் அந்த மூவரும் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். படுகாயமடைந்த மாணவிகளை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சஜினா நுரையீரல் பாதிப்படைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிகளை தாக்கிய மூவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


User: Oneindia Tamil

Views: 1.1K

Uploaded: 2018-07-20

Duration: 01:19

Your Page Title