டெல்லி புறப்பட்ட தமிழக விவசாயிகள்.. வீடியோ

டெல்லி புறப்பட்ட தமிழக விவசாயிகள்.. வீடியோ

அகில இந்திய விவசாயிகள் 30லட்சம் பேர் ஒன்றிணைத்து டெல்லியில் நாடுதழுவிய மாபெரும் போராட்டம்-தமிழக விவசாயிகள் டெல்லி புறப்பட்டனர்br br விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்குதல், தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கி கடன்களை தள்ளுபடி செய்தல், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தல், அதன்மூலம் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் கொடுத்தல், புயல் சேதத்தால் அழிந்துவிட்ட அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்டஈடு விரைத்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 2018 நவம்பர் 29,30 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலத்தில் இருந்தும் 30 இலட்சம் விவசாயிகள் ஒன்று திரண்டு தலைநகர் டெல்லியில் மாபெரும் புரட்சிப்போராட்டம் நடத்த உள்ளனர். இதில் தமிழகத்திலிருந்து அனைத்து விவசாய இயக்கங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.


User: Oneindia Tamil

Views: 1.7K

Uploaded: 2018-11-28

Duration: 02:08

Your Page Title