லாலாபேட்டை மகா மாரியம்மனுக்கு 11 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

லாலாபேட்டை மகா மாரியம்மனுக்கு 11 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

கரூர் மாவட்டம் லாலாபேட்டை கடைவீதி பகுதியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மாரியம்மனுக்கு புத்தாண்டை முன்னிட்டு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு மொத்தம் சுமார் பதினோரு லட்சம் ரூபாய் நோட்டுகளால் மாரியம்மனை அலங்கரித்து வைத்திருந்தனர். இப்பகுதியில் விவசாயமும விவசாயம் செழிக்கவும், வர்த்தகர்கள் தங்கள் வணிகம் பெருகவும், பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கவும், இந்த ரூபாய் நோட்டுகளால் மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதாக விழா கமிட்டியினர் தெரிவித்தனர். லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், திம்மாச்சிபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த மகாமாரியம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.


User: Oneindia Tamil

Views: 1.5K

Uploaded: 2019-01-05

Duration: 01:53