ஒரு மாத பெண் குழந்தையை கடும் குளிரில் போட்டு சென்ற கொடூரம்- வீடியோ

ஒரு மாத பெண் குழந்தையை கடும் குளிரில் போட்டு சென்ற கொடூரம்- வீடியோ

ஓசூர் உழவர் சந்தை மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் முக்கிய சந்தையாக பார்க்கப்படுகிறது,இந்நிலையில், இன்று காலை சந்தையின் அருகே குழந்தையின் அழுகுறல் சத்தம் கேட்பதாக விவசாயிகள் சென்று பார்த்தபோது, பிறந்த ஒருமாதமே ஆன பெண்குழந்தை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக பொதுமக்கள் ஓசூர் நகர காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்ததின் பேரில், ஆம்புலன்ஸ் மூலம் பெண்குழந்ததையை மீட்ட போலிசார்ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஓசூர் உழவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் குழந்தையை போட்டு சென்றவர்கள் யார்? என்பது பதிவாகியுள்ளதா என விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.குழந்தை வரமின்றி கோவில் கோவில்களாக சுற்றும் தம்பதிகள் இருக்கும் நம்மூரில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண்குழந்தையை பெற்றோருக்கு பாரமாக நினைத்து, கடும் குளிரில் துணியால் சுத்தப்பட்டவறு குழந்தையை போட்டு சென்ற கொடூரம் ஓசூரில் அரங்கேறியுள்ளது.


User: Oneindia Tamil

Views: 1K

Uploaded: 2019-01-19

Duration: 01:29