8 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த திருவாரூர் புதிய பேருந்து நிலையம்- வீடியோ

8 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த திருவாரூர் புதிய பேருந்து நிலையம்- வீடியோ

திருவாரூர் அருகே விளமல் என்ற இடத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு 11.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது br br 2011 ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு 2012ஆம் ஆண்டு முதற்கட்டமாக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது நிதி பற்றாக்குறையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகளுக்காக மேலும் 7 கோடியே 36 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதையடுத்து பேருந்து நிலைய பணிகள் முற்றிலுமாக நிறைவுற்றது. இதையடுத்து இன்று புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறந்து வைத்தார்.br br இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 36 பேருந்துகள் நிற்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர் இதனிடையே இந்நிலையத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் பேருந்து நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பை ஏற்படுத்திதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


User: Oneindia Tamil

Views: 26

Uploaded: 2019-02-28

Duration: 01:22