கழுத்தை நெரித்து அல்ல, மாலை அணிவித்து அமைத்த கூட்டணி- தமிழிசை- வீடியோ

கழுத்தை நெரித்து அல்ல, மாலை அணிவித்து அமைத்த கூட்டணி- தமிழிசை- வீடியோ

பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு மனு பெறும் நிகழ்ச்சி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றபின் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,br 1971 ஆம் ஆண்டிற்கு பிறகு, வலிமையான தலைமையினால் எல்லையை தாண்டி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும்,பாதுகாப்பு தரக்கூடிய தலைவர் கையில் நாடு இருப்பதாகவும்,இந்த தாக்குதலை நாடே வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.br இந்த தாக்குதல் நடத்தப்பட்டது நாட்டின் பாதுகாப்பு கருதி என்பதால் இந்த விவகாரத்தில் வாத விவதாங்கள் தவிர்க்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்ட தமிழிசை, தேமுதிக உடனும், புதிய தமிழகத்துடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்,மதவெறி மத்திய அரசு என ஸ்டாலின் கூறுவதை அவர் திரும்ப பெற வேண்டுமென்றும்,யாருடைய கழுத்தையும் நெரித்து கூட்டணி அமைக்கவில்லை. கழுத்தில் மாலை அணிவித்து கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


User: Oneindia Tamil

Views: 395

Uploaded: 2019-02-28

Duration: 02:42