பாம்பன் பாலத்தில் ரயில் சேவை பராமரிப்பு முடிவடைந்தது- வீடியோ

பாம்பன் பாலத்தில் ரயில் சேவை பராமரிப்பு முடிவடைந்தது- வீடியோ

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ராமேஸ்வரத்துக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.br மண்டபத்தையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டருக்கு கடலில் ரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் ராமேஸ்வரத்துக்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே ராமேஸ்வரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழி தடத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. 84 நாட்களுக்கு பிறகு பரமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதை தொடர்ந்துஇ இன்று ரயில் சேவை தொடங்கியுள்ளது. அனைத்து ரயில்களும் 10 கிலோ மீட்டர் வேகத்தில் ராமேஸ்வரம் வந்தடைந்தது. இதனால் பொதுமக்கள்இ சுற்றுலாப் பயணிகள்இ மீனவர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்தனர். வழக்கம் போல் அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் வந்து செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


User: Oneindia Tamil

Views: 557

Uploaded: 2019-02-28

Duration: 01:14

Your Page Title