கோவிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம் முடிவுக்கு வந்தது 2 தரப்பினரின் பிரச்சனை

கோவிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம் முடிவுக்கு வந்தது 2 தரப்பினரின் பிரச்சனை

சேலம் அருகே உள்ள திருமலைகிரியில் கோவில் பிரச்சினை தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சேலத்தை அடுத்துள்ள திருமலைகிரி தோப்புக்காட்டில் உள்ள ஸ்ரீ சைலகிரீஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகத்தை கடந்த 2015ஆம் ஆண்டு நடத்த ஒரு பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இது தொடர்பாக இரு பிரிவினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து சைலகிரீஸ்வரர் கோவில் மற்றும் வேடுகதான் பட்டி வரதராஜ பெருமாள் கோவில்கள் சீல் வைத்து அந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுக்குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இரு தரப்பினரும் தங்களது வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து சைல கிரீஸ்வரர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை முழுமையாக விலக்கிக் கொள்வதாக சேலம் வருவாய் கோட்டாட்சியர் செழியன் அறிவித்திருந்தார்.


User: Oneindia Tamil

Views: 2.8K

Uploaded: 2019-03-02

Duration: 01:26