தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2019-03-11

1 Views

01:48

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான கல்வி உபரணங்கள் சீர் வரிசையாக வழங்கி தங்கள் குழந்தைகளை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் தலைமையில் அரசுப் பள்ளியில் சேர்த்த SVG புரம் பொதுமக்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஏதுவாக ஆசிரியர்கள் கிராம கல்வி குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அவசியம், கல்வியின் தரம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக SVGபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஏதுவாக அப்பள்ளி ஆசிரியர்கள், கிராம கல்வி குழு உறுப்பினர்கள் தொடர் முயற்சியால் அரசுப்பள்ளியில் சேர்க்க பொதுமக்கள் முன் வந்தனர். அதுவும் பள்ளிக்கு சுமார் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் சீர் வரிசையாக மேள தாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பள்ளிக்கு வந்தடைந்தனர். புதியதாக பள்ளியில் முதல் வகுப்பில் சேர வந்த 5 மாணவ, மாணவிகளுக்கு தலைமையை ஆசிரியர் ஆறுமுகம் தலைமையில் மலர் மாலை அணிவித்து, சந்தனம் பூசி, ஆரத்தி எடுத்து கல்வி பொருட்கள் வழங்கி வகுப்புகளுக்கு வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம் நரசிம்மன் கலந்து கொண்டு பேசினார் இதில் ஊர் பொதுமக்கள் ஆர்வத்துடன் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.

DES : Students enroll in the academic year to challenge private schools

Trending Videos - 14 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 14, 2024