தஞ்சையில் தேர்தல் விழிப்புணர்வு தஞ்சை கோட்டாட்சியர் பங்கேற்று தொடங்கி வைத்தார்

தஞ்சையில் தேர்தல் விழிப்புணர்வு தஞ்சை கோட்டாட்சியர் பங்கேற்று தொடங்கி வைத்தார்

வாக்காளர்கள் 100 உண்மையாக வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தஞ்சையில் வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம் தொடங்கியது. மக்களவை தேர்தல் நன்னடத்தை விதி அமுலுக்கு வந்த நிலையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் தஞ்சை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் வாக்காளர்கள் கையொப்பமிட்டு உறுதிமொழி கூறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தஞ்சை கோட்டாட்சியர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.


User: Oneindia Tamil

Views: 450

Uploaded: 2019-03-14

Duration: 01:13