பத்தாம் வகுப்பு தேர்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பத்தாம் வகுப்பு தேர்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 961 மாணவர்களும் 23 ஆயிரத்து 561 மாணவிகளும் தனித்தேர்வர்கள் 2 ஆயிரத்து 215 பேர் மற்றும் பார்வையற்ற மாணவர்கள் 22 பேர் மற்றும் சிறைவாசிகள் 51 பேர் உள்பட மொத்தம் 48 ஆயிரத்து 739 பேர் எழுதுகின்றனர். இத்தேர்விற்காக 18 கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திற்கும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரும் மூத்த முதுகலை ஆசிரியர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இம்மாவட்டத்தில் உள்ள 168 தேர்வு மையங்களிலும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் நரம்பியல் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் 20 தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என 2 ஆயிரத்து 439 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 75 பறக்கும்படை, 292 நிரந்தர படை ஆகியவை நியமனம் செய்யப்பட்டுள்ளது. கட்டுக்காப்பு மையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு வினாத்தாளை எடுத்து வர 33 வழித் தடங்கள் அமைக்கப்பட்டு, வழித்தடங்களுக்கு 66 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாத ஆவணங்கள் மொபைல் போன், கால்குலேட்டர், கைகடிகாரம், பென்டிரைவர் பெல்ட் ஆகியவை எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் சிஎஸ்ஐ கௌடி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் ஆய்வு செய்தார். ஆட்சியருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-03-16

Duration: 01:32

Your Page Title