தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. தமிழக எல்லையில் காவல் துறையினர் வாகன சோதனை- வீடியோ

தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. தமிழக எல்லையில் காவல் துறையினர் வாகன சோதனை- வீடியோ

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த ஆந்திரா எல்லையோர பகுதியான சிவாடா கிராமத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் தணிக்கைகுட்படுத்தப்பட்டன.வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க உதவி கண்காணிப்பாளர் சேகர் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டது. ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இதுபோன்று அண்டை மாநில எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் தனித்தனியாக சிறப்பு படைகளை அமைத்து தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-03-16

Duration: 01:09