சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் பிரச்சாரம்- வீடியோ

சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் பிரச்சாரம்- வீடியோ

சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணன் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக அஸ்தம்பட்டி பகுதி கழக செயலாளரான கே.ஆர்.எஸ்.சரவணன் அறிவிக்கப்பட்டார். கடந்த 20ம் தேதி நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் சரவணனை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து கட்சி அலுவலகம் திறப்பு விழா, கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்றைய தினம் வேட்பாளர் சரவணன் தனது முதல்நாள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதனையடுத்து இரண்டாவது நாளாக சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குகை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய சரவணன், அங்கிருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். சரவணனுடன், சேலம் மாநகர மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக, மாவட்ட தலைவர் கோபினாத் பாமக மாநில துணை தலைவர் அருள், மாநகர் மாவட்ட செயலாளர் ரத்தினம் , தேமுதிக மாநகர செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-03-30

Duration: 01:36

Your Page Title