பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் வாக்கு சேகரிப்பு-வீடியோ

பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் வாக்கு சேகரிப்பு-வீடியோ

விழுப்புரம் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி; வேட்பாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வீதி வீதியாக சென்று மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் திருநாவலூர் ஒன்றிய கழக செயலாளர் செண்பகவேல் ,மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-04-06

Duration: 01:42