அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி கூட்டம்- வீடியோ

அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி கூட்டம்- வீடியோ

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாமக செய்திதொடர்பாளரும் இவழக்கறிஞருமான பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக மாநில துணை பொதுசெயலாளர் சரவணன்இ காட்பாடி தொகுதி பொறுப்பாளர்கள் சக்கரவர்த்திஇ கார்த்திக்ராஜாஇ துளசிராமன் உட்பட கூட்டணி கட்சியினர் திரளனோர் கலந்து கொண்டனர.; பின்னர் பாலு செய்தியாளர்களிடம் கூறும்போதுஇ மாநிலம் முழுவதும் அதிமுக கூட்டணி கட்சி வழக்கறிஞர்களை கொண்டு சட்டபாதுகாப்பிற்காக பறக்கும்படை உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும்இ அரக்கோணத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்த போதுஇ பாமக நிறுவனர் மற்றும் அவரது துணைவியார் மீதும் புகார்களை கூறியுள்ளார். வன்னியர் அறக்கட்டளை சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்ய திமுக வழக்கறிஞர்கள் குழுவிற்கு அனுமதிக்கிறோம் என்றும்இ இதே போன்று திமுக அறக்கட்டளை மற்றும் முரசொலி அறக்கட்டளை ஆய்வு செய்ய பாமக குழுவிற்கு வழிவிடுவாரா என ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.


User: Oneindia Tamil

Views: 748

Uploaded: 2019-04-12

Duration: 01:34