கடைகளில் விற்பனை செய்யப்படும் புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்க்கு தடை- வீடியோ

கடைகளில் விற்பனை செய்யப்படும் புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்க்கு தடை- வீடியோ

நெல்லை மாவட்டம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் உத்தரவின்பேரில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள் அருகிலுள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்களை தடை செய்து வருகின்றனர். இந்நிலையில் பணகுடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார துறையினருக்கு தகவல் திடைத்தது. அதன்படி வடக்கன்குளம் வட்டார சுகாதார துறையினர் சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜன், மூக்காண்டி, வேலம்மாள் மற்றும் போலீசார் பணகுடி மங்கம்மாள் சாலை, அண்ணாநகர், புண்ணியவாளன்புரம், காவல்கிணறு மற்றும் தளவாய்புரம் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் அருகிலுள்ள கடைகளில் அதிரடி சோதனையிட்டனர். சோதனையின்போது அந்த கடைகளில் சிகரெட் பாக்கட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-05-02

Duration: 01:12

Your Page Title