ஆம்பூர் அருகே தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்- வீடியோ

ஆம்பூர் அருகே தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்- வீடியோ

தடை செய்யப்பட்ட போதைபாக்குகள் குட்கா ஆகியவைகள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் காவல்துறையினர் சோதனையை முடுக்கிவிட்டனர் ஆம்பூர் நகர காவல்துறையினர் மற்றும் தனிப்படை போலீசார் ஆம்பூர் பகுதியில் வாகன சோதனையை மேற்கொண்டனர் அப்போது பெங்களூரிலிருந்து வேலூரை நோக்கி வந்த லாரியை பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் மடக்கி சோதனை செய்த போது லாரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா ஹான்ஸ் ,போதைபாக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் லாரி முழுவதும் கொண்டுவரப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதால் லாரியை ஓட்டி வந்த சேலத்தை சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் குமார் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் லாரிக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பாகவும் வந்த ஒரு காரை அவர்கள் சுட்டிகாட்டினார்கள் அந்த காரையும் காவல்துறையினர் மடக்கி அதிலிருந்த வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ஓட்டுநர் இப்ராஹிம் மற்றும் முகமது பையாஸ்,முகமது கௌவுஸ் ஆகியோரையும் பிடித்து விசாரணை செய்தனர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ரூ.50 லட்சம் மதிப்பிலான போதைபாக்குகள் மற்றும் குட்காவை பறிமுதல் செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர் அத்துடன் லாரிக்கு பாதுகாப்பாக வந்த காரையும் பறிமுதல் செய்தனர் இதில் சுரேஷ் குமார்,சரவணன்,இப்ராஹிம்,முகமது பையாஸ்,முகமது கௌவுஸ் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா கார் லாரி ஆகியவற்றின் மதிப்பு சுமார் ரூ.


User: Oneindia Tamil

Views: 365

Uploaded: 2019-05-04

Duration: 01:27