பாஜக ஆட்சி தொடரவேண்டும்- புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி பேச்சு- பாஜக-வீடியோ

பாஜக ஆட்சி தொடரவேண்டும்- புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி பேச்சு- பாஜக-வீடியோ

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கருங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 3 தினங்களாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது மக்கள் அளிக்கும் ஆதரவை வைத்து பார்க்கும்பொழுது அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றார். பிரதமர், முதல்வர் குறித்து தொடர்ச்சியாக தனிப்பட்ட முறையில் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருவது குறித்து கேட்டதற்கு, அரசியலில் பதவி வரும், போகும், அனால் தனி மனிதர்களை காயப்படுத்தும் வகையில் பிரச்சாரம் மேற்க்கொள்ளக்கூடாது என்றார். அது அரசியல் தரம்தாழ்ந்த செயல் இதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். அனைத்து கட்சி தொண்டர்களும் திமுகவை ஆதரிப்பதாக ஸ்டாலின் குறித்து அவர் கூறுகையில் மிகப்பெரிய கூட்டணி வைத்துள்ள எங்களுக்குத்தான் ஆதரவு இருக்கும் என்றார். மே 23ம் தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் கூறியது குறித்து கேட்டதற்கு அவர்களுக்கு ஏமாற்றம் வரும் என்றார். மேலும் முன்னாள் முதலமைச்சர் செயல்படுத்திய சிறந்த மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழகஅரசின் இந்த ஆட்சி தொடரவேண்டும் என புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி கூறினார்.br br des : The new state party president, Dr.


User: Oneindia Tamil

Views: 340

Uploaded: 2019-05-06

Duration: 03:15