பேக்கரியின் மேற்கூரையை தகர்த்து 5 லட்சத்து 80 ஆயிரம் பணம் திருட்டு

பேக்கரியின் மேற்கூரையை தகர்த்து 5 லட்சத்து 80 ஆயிரம் பணம் திருட்டு

புதுச்சேரியில் உள்ள பேக்கரியின் மேற்கூரையை தகர்த்து 5 லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அடுத்த மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் குண்டுசாலை பகுதியில் கடந்த 5 வருடங்களாக பேக்கரி கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இரவு இவர் பேக்கரி கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். காலை வந்து கடையை திறந்து பார்த்த போது கடையில் வைத்திருந்த 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது. மர்ம நபர்கள் கடையின் மேல்கூரையை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்கள் கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமிரா பதிவு செய்யும் ஹார்டுடிஸ்கையும் எடுத்துச்சென்றுள்ளனர். இது குறித்து பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.br பேக்கரி கடையின் மேல்கூறையை தகர்த்து உள்ளே சென்று பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-05-09

Duration: 01:03