அமைச்சர் கடம்பூர் ராஜு, காமராஜ் ஆகியோர் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு- வீடியோ

அமைச்சர் கடம்பூர் ராஜு, காமராஜ் ஆகியோர் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு- வீடியோ

ஓட்டப்பிடாரம் தனி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்காக தூத்துக்குடி மாநகர எல்லைப்பகுதிகளில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தனி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி சங்கரபேரி, பண்டாரம்பட்டி, தேவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, உணவு அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சங்கரப்பேரி அதிமுக வேட்பாளர் மோகனுக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து அமைச்சர்களையும் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பண்டாரம்பட்டியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து அமைச்சர்கள் டீ குடித்துவிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து வேட்பாளர் மோகன் பேசுகையில், தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்த அவர் சீரான குடிநீர், தரமான சாலைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் அமைத்து தருவதாக கூறி தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.


User: Oneindia Tamil

Views: 176

Uploaded: 2019-05-10

Duration: 01:11