அரக்கோணம் அருகே இளைஞர் வெட்டி மற்றும் கல்லை போட்டு கொலை!

அரக்கோணம் அருகே இளைஞர் வெட்டி மற்றும் கல்லை போட்டு கொலை!

வேலூர் மாவட்டம் ,அரக்கோணம் அடுத்த ஆவதம் பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று அதே பகுதியில் உள்ள கிருஸ்துவ ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தயிர் வாங்க கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு எதிரே வந்த கீழ் ஆவதம் பகுதியை சேர்ந்த இரண்டு பேர் தட்சணாமூர்த்தியை நிறுத்தி மது அருந்த பணம் கேட்டதாகவும் இதனால் மூன்று பேருக்குள் வாய் தகறாறு ஏற்பட்டு மர்ம நபர்கள் வைத்திருந்த ஆயுதத்தால் தட்சனாமூர்த்தியை சரமாறியாக தாக்கியதில் நிலைகுலை சரிந்து விட்டதாகவும் அவருடைய தலையின் மீது பெரிய கல்லை போட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஊறவினர்கள் தட்சனாமூர்த்தியை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய கோரி காவல் துறையினரை வலியுறித்தி அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். சுமார் இரண்டு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் நடவடிக்கை மேற்க்கொள்வதாக காவல் துறை உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் மேலும் இரு பகுதிகளில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் முழு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.


User: Oneindia Tamil

Views: 3

Uploaded: 2019-05-14

Duration: 01:25

Your Page Title