இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வீணாகும் குடிநீர், கண்டுகொள்ளாத தொண்டி பேரூராட்சி நிர்வாகம்

By : Oneindia Tamil

Published On: 2019-05-29

1 Views

01:02

இராமநாதபுரம் மாவட்டம், திருவானை தாலுகா, தொண்டி பேரூராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் படி மாவிடுதிக்கோட்டையில் இருந்து குடி தண்ணீர் செல்கிறது. இந்த குடி தண்ணீர் சின்னகீரமங்கனலத்தில் திருச்சி-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உடைப்பு ஏற்பட்டு வீணாகிறது. குடிநீர் வீணாக கடந்த ஒரு மாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த வீனாகும் தண்ணீர் ரோட்டில் போடும் எந்த அதிகாரிகள் கண்களில் படுவதாய் இல்லை .இராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அங்கங்கே போராட்டம் பண்ணி கொண்டிருக்கும் நிலையில் தேசிய நெடுன்லையான திருச்சி-இராமேஸ்வரம் சாலை சேதமடைந்து விபத்து அபாயம் உள்ளது. அது பற்றி பல முறை அதிகாரிகளுக்கு பொது மக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் தேங்கி கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள் இதனால் அதிகாரிகள் உடனே துரித நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ள ளனர்.

des : The panchayat management of the volunteer water tank near Thiruvatanam in Ramanathapuram district

Trending Videos - 3 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 3, 2024