இறந்துகிடந்த ஆண்யானையின் தந்தங்களை வெட்டி கடத்தல் -வீடியோ

இறந்துகிடந்த ஆண்யானையின் தந்தங்களை வெட்டி கடத்தல் -வீடியோ

கடம்பூர் மலைப்பகுதியில் இறந்துகிடந்த ஆண்யானையின் தந்தங்களை வெட்டி கடத்தியவர்களை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மலைகிராமங்களில் தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள காந்திநகர் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதி எல்லையில் உள்ள வருவாய் புறம்போக்கு நிலத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு யானை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுபார்த்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க யானையின் உடலிலிருந்து தந்தங்கள் வெட்டியெடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து இறந்த யானையில் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் பிரேதப்பரிசோதனை செய்தபின் சோதனையின் முடிவில் இறந்து கிடந்த யானை குடற்புழு நோய்தாக்கி வயிற்றுப்புண் ஏற்பட்டு இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் யானையின் தந்தங்களை வெட்டியெடுத்தவர்களை கண்டறிய மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் யானை இறந்து கிடந்த இடத்திலிருந்து காந்திநகர் கிராமம் வரை ஓடி நின்றது. யானையின் தந்தங்களை வெட்டி கடத்திய குற்றவாளிகளை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மோப்பநாயை பயன்படுத்தி மலைகிராமங்களில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


User: Oneindia Tamil

Views: 737

Uploaded: 2019-06-04

Duration: 01:36