முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜெகன் எடுத்த ஆச்சர்ய முடிவுகள்

முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜெகன் எடுத்த ஆச்சர்ய முடிவுகள்

ஆந்திராவில் ரேஷன் பொருட்கள் பயனாளிகளின் வீடு தேடி வரும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். இதேபோல் அரசு ஊழியர்களின் புதிய பென்ஷன் திட்டத்தையும் ரத்து செய்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூடத்தில் 25 அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் 1 தேதி முதல் ஆந்திராவில் ரேஷன் பொருட்கள் பயனாளிகளின் வீடு தேடி வரும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. கிராம தன்னார்வலர்கள் மூலம் கொண்டு சேர்க்கும் ரேஷன் பொருட்கள் வீடுகளில் கொண்டு சேர்க்கப்படும். அந்த பொருட்கள் அனைவரும் சாப்பிடும் வகையில் தரமான இருக்கும்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-06-11

Duration: 01:56