உலக இசை தினத்தை முன்னிட்டு அரசு பள்ளிகளில் இளைஞர்களுக்கான இசைப் போட்டிகள்- வீடியோ

உலக இசை தினத்தை முன்னிட்டு அரசு பள்ளிகளில் இளைஞர்களுக்கான இசைப் போட்டிகள்- வீடியோ

உலக இசை தினத்தை முன்னிட்டு கலை பண்பாட்டுத்துறை சார்பில் அரசு பள்ளிகளில் இளைஞர்களுக்கான இசைப் போட்டிகள் நடைபெற்றன தமிழக ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை சார்பாக 2018 2019 ஆம் ஆண்டு உலக இசை தினம் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் இத் தினத்தை சிறப்பாக கொண்டாடப் படும் விதமாக அரசு இசை கல்லூரி மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளின் வாயிலாக ஆண்டுதோறும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசைப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி புதுக்கோட்டை திலகர் திடலில் இயங்கி வரும் அரசு இசைப்பள்ளியில் நேற்று இசைப் போட்டிகள் துவங்கின 15 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்களுக்கு நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த இசைப் போட்டியில் தமிழிசை போட்டியான கிராமிய பாடல் போட்டி முதன்மை கருவிசை போட்டி நாதஸ்வரம் வீணை வயலின் புல்லாங்குழல் கோட்டுவாத்தியம் சக்சஸ் போன் கிளாரிநெட் கருவி இசை போட்டிகள் நடத்தப்பட்டன மேலும் மிருதங்கம்br கடம் கஞ்சிரா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன இதில் ஏராளமான கலைபள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 3000 இரண்டாவது பரிசாக 2000 மூன்றாவது பரிசக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழக அரசின் இசை பள்ளிகளின் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


User: Oneindia Tamil

Views: 5

Uploaded: 2019-06-21

Duration: 04:01