இந்துக்களுக்கு பிற்கால பிராமணர்கள் செய்த நல்ல காரியம்! | Unknown facts about Hindu

இந்துக்களுக்கு பிற்கால பிராமணர்கள் செய்த நல்ல காரியம்! | Unknown facts about Hindu

#goddess #hindus #brahmins br br br இந்தியாவில் பிற மதங்களைப் போல அல்லாது இந்துக்கள் வழிபாடு செய்ய ஏராளமான தெய்வங்கள் உண்டு. தெய்வங்களின் ரிஷிமூலத்தை ஆராயக்கூடாது என்பது ஆன்றோர் வாக்காக இருந்த போதும். உண்மை நிலையை ஆராயும் குணம் வரலாற்று ஆய்வாளர்களுக்கு அன்றும், இன்றும், என்றுமே இருந்து வருகிறது. இந்தியாவில் ஆதியில் இருந்து வந்தது தாய் தெய்வ வழிபாடே, அதன் பின் வேதகால நாகரீகத்தின் அடிப்படையில் தந்தை வழிச் சமூகம் உருவான போது ஏராளமான ஆண் தெய்வங்களும் உருவாகிப் பெருகினர். நமது தெய்வங்கள் உருவான வரலாற்றைச் சொல்வதே இக்காணொலியின் நோக்கம். அத்துடன் இந்திய நாகரீகத்துக்கும், கிரேக்க மற்றும் ரோமானிய நாகரீகத்துக்கும் நெருங்கிய தொடர்புகளுண்டு. அவர்களது வழிபாட்டு முறைகளுக்கும், இந்திய வழிபாட்டு முறைகளுக்கும் தெய்வங்களுக்குள் இடையில் மிக நெருங்கிய ஒற்றுமைகள் பல உண்டு. நம்முடைய கிருஷ்ணனுக்கும், கிரேக்கக் கடவுளான ஹெர்குலிஸுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமை கூட அசாத்தியமானது. இத்தனை தெய்வங்களையும் ஒருங்கிணைத்த பெருமை அன்றைய வைதீக பிராமணர்களையே சாரும். அது பிற்கால பிராமணர்கள் இன்றைய இந்துக்களுக்குச் செய்த நல்லகாரியமென்றால் அதில் மிகையில்லை.


User: Dinamani

Views: 1

Uploaded: 2019-06-28

Duration: 07:49

Your Page Title