Success story of Amazon Tribes! | சட்டப்போராட்டத்தில் அரசை எதிர்த்து வென்ற அமேசான் பழங்குடி மக்கள்!

Success story of Amazon Tribes! | சட்டப்போராட்டத்தில் அரசை எதிர்த்து வென்ற அமேசான் பழங்குடி மக்கள்!

அரசுக்கு எதிரான இந்த சட்டப்போராட்டத்தில் பழங்குடி மக்கள் வென்றதில் அப்படி என்ன அதிசயம்? தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும், எனினும் இறுதியில் தர்மம் வெல்லும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே என யாரும் எளிதில் இவ்விஷயத்தைப் பற்றிக் கருத்துக் கூறி விலகிச் செல்லலாம். ஆனால், பாருங்கள், ஈக்வடார் அரசை எதிர்த்துப் போராடிய வோரானிய பழங்குடி மக்களின் எண்ணிக்கை வெறும் 5000 க்கும் குறைவே என்பதை அத்தனை எளிதில் நாம் புறக்கணித்து விட முடியாது. இங்கே சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் டெல்டா பகுதி மக்கள் கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக அரசுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டே தான் இருக்கிறோம். இருப்பினும் மக்களுக்குச் சாதகமான முடிவொன்றை எட்ட முடியாத நிலையே இப்போதும் நீடித்து வருகிறது. அவர்கள் வெறும் 5000 க்கும் குறைவு தான் என்றாலும் தங்களது உரிமைகளுக்காக சட்டப்படி போராடி வென்றிருக்கிறார்கள் எனும் போது நம்மாலும் முடியும் என்ற உத்வேகம் நம் மக்களுக்கும் வரவேண்டும்.br br ஏனெனில், அரசின் வளர்ச்சித் திட்டங்களைக் காட்டிலும் மனிதர்களின் வாழ்க்கை பெரிது.


User: Dinamani

Views: 0

Uploaded: 2019-06-28

Duration: 04:48

Your Page Title