செம்மரங்களை வெட்டி லாரியில் கடத்தி சென்ற கடலூரை சேர்ந்த உலகநாதன் வேலு ஆகியோர் கைது -வீடியோ

செம்மரங்களை வெட்டி லாரியில் கடத்தி சென்ற கடலூரை சேர்ந்த உலகநாதன் வேலு ஆகியோர் கைது -வீடியோ

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் போருமாமில்லா சாலையில் எர்ர செருவு கிராஸ் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.ஆனால் அதில் இருந்தவர்கள் லாரியை நிறுத்திவிட்டு தப்பி செல்ல முயன்றனர். அவர்களை பிடித்த போலீசார் கைது செய்து செம்மரங்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பற்றி கூடுதல் எஸ்பி லட்சுமி நாராயண செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரம் வெட்டி லாரியில் கடத்த முயன்ற சர்வதேச கடத்தல்காரர்களான கொல்கத்தாவை சேர்ந்த ரானாதத்தா , கடலூரை சேர்ந்த உலகநாதன் வேலு, ஆகியோர் செம்மர கட்டைகளை லாரியில் கடத்தினர்.அவர்களை போலீசார் கைது செய்தனர். ரானாதத்தா கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து உலகநாதன் வேலுவுடன் சேர்ந்து லாரி மூலம் கடப்பா மாவட்டம் காசிநாயினி மண்டலம் நல்லமல்லா வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி லாரியில் கடத்தி சென்ற போது போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.3 டன் எடை கொண்ட 90 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


User: Oneindia Tamil

Views: 566

Uploaded: 2019-07-09

Duration: 03:43