ஆம்பூர் மற்றும் மாதனுரில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்- வீடியோ

ஆம்பூர் மற்றும் மாதனுரில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்- வீடியோ

வேலூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் மாதனுரில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் அமமுக மற்றும் திமுக கட்சியில் இருந்து விலகி 50 க்கும் மேற்பட்டோர் br அதிமுகவில் இணைந்தனர்.அதில் கலந்துகொண்டு பேசிய வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியின் வேட்பாளரும் புதியநீதிக்கட்சிதலைவருமான ஏ.சி. சண்முகம் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதுபோல வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நீங்கள் வளர்த்த இந்த இரட்டை இலை. நீங்கள் பாடுபட்ட தாய் கழகம் அதிமுக ஆகவே நீங்கள் எங்களுடன் வந்து இணைந்து பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும்.என்று அழைப்பு விடுத்தார்.சிறுபான்மையினருக்கு பாதுகாவலனாக இருக்கும் இயக்கம் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே.திமுகவில் இன்னும் 30 சதவீதம் உட்பூசல் உள்ளது ஒரு பிரதமரை தேர்வு செய்யக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினர் செய்த பணப் பட்டுவாடா பிரச்சினைகளால் வேலூர் நாடாளுமன்ற தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் திமுகவில் மீண்டும் அதே வேட்பாளரை நிறுத்தி உள்ளார்கள். ஏனென்று படித்தவர்கள் மற்றும் பாமர மக்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்க கூடிய வாய்ப்பினை வேலூர் மக்கள் இழந்து விட்டார்கள் காரணம் திமுக. என்று குற்றம் சாட்டினார்.செல்லாத கட்சிக்கு ஓட்டு போட்டு அவர்கள் வெற்றி பெற்று எந்த உபயோகமும் இல்லை என்று மக்களே முடிவெடுத்துவிட்டார்கள். என்று பேசினார்.


User: Oneindia Tamil

Views: 441

Uploaded: 2019-07-12

Duration: 03:07

Your Page Title