6 வயது சிறுவன் கண்முன்னே அவனது தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம கும்பல்

6 வயது சிறுவன் கண்முன்னே அவனது தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம கும்பல்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(32)இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் சென்னையில் தங்கி சுண்டல் வியாபாரம் செய்து வந்துள்ளார்.கடந்தவாரம் ஊருக்கு வந்திருந்த நிலையில் இன்று மாலை தனது நண்பர்கள் சிலருடன் கீழக்கரை கடர்க்கரையோரம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார், அவரது மனைவி வீட்டில் இல்லாததோடு அவரது 6 வயது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார் நாகராஜ், இரவு 9 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் 6 வயது சிறுவன் கண்முன்னே அவனது தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2019-07-13

Duration: 02:30