மொபைலைச் சுற்றி தாலிகட்டிய மாப்பிளை..! இது புது ஐடியா! | Marriage in video call #viralvideo

மொபைலைச் சுற்றி தாலிகட்டிய மாப்பிளை..! இது புது ஐடியா! | Marriage in video call #viralvideo

வீடியோ காலில் தெரிந்த அஞ்சனாவுக்கு ஸ்ரீஜித் மொபைலைச் சுற்றி தாலியைக் கட்டுகிறார். அந்த சமயத்தில் அஞ்சனாவும் தன் கழுத்தில் தாலியைக் கட்டிக்கொண்டார்.br br கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே முடங்கிப்போயுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில் 20-க்கும் குறைவானவர்கள்தான் கலந்துகொள்ள வேண்டும். அப்படி கலந்துகொள்பவர்களும் ஒரு மீட்டருக்குமேல் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என்பதுபோன்ற பல விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல திருமணங்களில் மணமக்கள் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளிவிட்டும் நடைபெற்றன.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 03:22