அம்மா பால் கொடுக்குறாங்க அவ்ளோதான்..! ஓர் அம்மாவின் அனுபவம்!#breastfeeding

அம்மா பால் கொடுக்குறாங்க அவ்ளோதான்..! ஓர் அம்மாவின் அனுபவம்!#breastfeeding

Reporter - குருபிரசாத்br br ``ரொம்ப இயல்பா, குழந்தை முன்னிலையில் பாலூட்டும்போது, `பாப்பாவுக்கு பசிக்குது, அம்மா பால் கொடுக்குறாங்க அவ்ளோதான்...'னு குழந்தையும் அதை இயல்பா எடுத்துக்கும். மார்பு குறித்த அதன் குழப்பமும் ஆர்வமும் குறையும்."br br டிஜிட்டல் யுகம் என்று வீறுகொண்டு நடந்தாலும், நம் சமூகத்தில் இப்போதும் மூடநம்பிக்கைகள் குறைந்தபாடில்லை. அதிலும், கர்ப்பம், தாய்ப்பாலூட்டுதல் இரண்டிலும் மூடநம்பிக்கைகள் அதிகம் உலாவிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த கர்ப்பகால ஆலோசகர் அனுபமா, கர்ப்பம், தாய்ப்பாலூட்டலில் உள்ள ஸ்டீரியோடைப்களைத் தொடர்ந்து உடைத்து வருகிறார்.br br `விருக்ஷம்' என்ற தனது அமைப்பின் மூலம் கோவை, திருப்பூரில் கர்ப்பிணிப் பெண்களுக்கான உடல்நல, மனநல பயிற்சிகள், ஆலோசனைகளை வழங்கி வரும் அனுபமா, சமீபத்தில், மூத்த குழந்தை முன் இரண்டாவது குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுவது குறித்த தன் அனுபவ பகிர்வை, தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.


User: NewsSense

Views: 13

Uploaded: 2020-11-06

Duration: 04:59