இஸ்ரோ கார்ட்டூன் பதிலடி!

இஸ்ரோ கார்ட்டூன் பதிலடி!

பொதுவாகவே இந்தியா என்றால் உலக நாடுகளுக்கு மாடுகள்தான் நினைவுக்கு வரும். பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் இந்தியா பற்றி ஏதாவது ‘கார்ட்டூன்’ வெளியிட்டால், அதில் நிச்சயம் மாடு இடம்பெற்றிருக்கும். இந்தியா மங்கல்யானை ஏவிய போதும் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. பொதுவாக ராக்கெட் தொழில்நுட்பத்தில் ரஷ்யா, அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள்தான் முன்னோடிகள். இந்தியாவுக்கு முதன்முதலில் ராக்கெட் தொழில் நுட்பத்தைத் தந்ததும் ஃபிரான்ஸ்தான். br சரி... நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கார்ட்டூனுக்கு வருவோம்... அதாவது ஒரு அறை இருக்கிறது. அறைக்குள் ராக்கெட் தொழில் நுட்பத்தில் வளர்ச்சிபெற்ற நாடுகள் இருக்கின்றன. அந்த அறையில் ‘Elite Space Club’ என எழுதப்பட்டிருக்கிறது. கையில் மாடு ஒன்றை பிடித்திருக்கும் நபர், அந்த அறையின் கதவைத் தட்டுவார். அவர் மீது ‘இந்தியா' என எழுதப்பட்டிருக்கும். அதாவது ‘மாடு ஓட்டுபவர்கள் எல்லாம் ராக்கெட் ஏவ வந்து விட்டனர்’ என்பதே அந்த கார்ட்டூனின் அர்த்தம். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ‛நியூயார்க் டைம்ஸ்’ மன்னிப்பு கேட்டது.


User: NewsSense

Views: 3

Uploaded: 2020-11-06

Duration: 06:22