கண்ணில்பட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கிய யானை! | அத்தியாயம் 1

கண்ணில்பட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கிய யானை! | அத்தியாயம் 1

ஒரு கும்கி உருவாகும் கதை - br மேற்கு வங்க மாநிலத்தில் குட்டி யானையின் வாலில் தீ வைத்த வீடியோ ஒன்றைப் பார்க்க நேரிட்டது. குட்டி யானையோடு சேர்ந்து இருக்கிற தாய் யானையை நோக்கி தீப்பந்தங்களை வீசுகிறார்கள். அவ்வளவு பெரிய உயிரினம்; காட்டில் ராஜாவாக வலம் வருகிற யானைக்குத் தீ வைப்பதெல்லாம் எவ்வளவு பெரிய வன்மம்? தமிழகத்தில் கூடலூர் பக்கத்தில் காட்டு மக்னா யானையொன்று குப்பை தொட்டியில் உணவு தேடுகிற புகைப்படத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடியவில்லை. தினம் தினம் யானைகள் அட்டகாசம், யானை பலி, யானை குட்டி மீட்பு, யானைக் கூட்டம் கும்கிகள் உதவியுடன் காட்டுக்குள் விரட்டியடிப்பு என யானைகள் குறித்த செய்திகள் இல்லாத தினசரிகள் இல்லை.


User: NewsSense

Views: 4

Uploaded: 2020-11-06

Duration: 03:22

Your Page Title