என் குழந்தைக்கு accident! யாருக்குமே தெரியாது ! Big Boss Emotional #bigboss

என் குழந்தைக்கு accident! யாருக்குமே தெரியாது ! Big Boss Emotional #bigboss

Reporter - சுரேஷ் கண்ணன்br br பார்ப்பதற்கு இயல்பானவராகவும் இனிமையானவராகவும் தெரிந்த அனிதா, இன்று ஒரு சிறிய விஷயத்திற்கு மிகவும் அப்செட் ஆகி பஞ்சாயத்தைக் கூட்டி விட்டார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களின் ஒப்பனைகள் ஒரே நாளிலேயே கழன்று விழத் துவங்கி விட்டன. என்ன நடந்ததென்று விரிவாகப் பார்ப்போம்.br br நேற்றைய நாளின் நாமினேஷன் ஒத்திகை தொடர்ந்தது.br br பாலா: இவர் பிடித்தவர்களாக தேர்ந்தெடுத்தது சுரேஷ் மற்றும் ரியோ. என்ன காரணத்தினாலோ சுரேஷைப் பார்த்தவுடனே இவருக்கு பிடித்து விட்டதாம். (பார்றா!) ரியோ மீது மிகப் பெரிய மரியாதையும் அன்பும் உண்டாம். (ரெண்டே நாள்ல எப்படி?!)br br பிடிக்காதவர்களின் வரிசையில் ரேகாவை இவர் தேர்ந்தெடுத்தது ஆச்சர்யமில்லை. “சும்மா நொய்.. நொய்னு.. மத்தவங்களை நச்சரிச்சிக்கிட்டே இருக்காங்க” என்று கடுப்பான முகத்துடன் பாலா சொன்னதை மற்றவர்கள் உள்ளூற ரசித்தார்கள். ‘அப்ஜெக்ஷன் மை லார்ட்’ என்று எழுந்து வந்து விளக்கம் அளித்த ரேகா “நான் அம்மா மாதிரிதான் சொல்றேன்... செல்லக்குட்டி... பட்டுக்குட்டி... ன்னு சொல்லித்தான் வேலை வாங்குவேன்” என்று சொல்ல ‘இந்த டகால்ட்டி சென்ட்டியெல்லாம் இங்க வேணாம்” என்று ஆஜித்திற்கு மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம்.


User: NewsSense

Views: 41

Uploaded: 2020-11-06

Duration: 03:32

Your Page Title