'105 வயதில் விவசாயத்துக்காக பத்மஶ்ரீ விருது...' - சாதிக்கும் பாப்பம்மாள் பாட்டி!

'105 வயதில் விவசாயத்துக்காக பத்மஶ்ரீ விருது...' - சாதிக்கும் பாப்பம்மாள் பாட்டி!

60 வயதைக் கடந்து ஆரோக்கியமாக வாழ்வது அதிசயம். அதுவே, 100 வயதைக் கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்தால், அது பேரதிசயம். அப்படி ஓர் பேரதிசயத்துக்குச் சொந்தக்காரி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள். இன்ஸ்டன்ட் உணவு, இன்ஸ்டன்ட் லோன் என்று நம் படு வேகமாக நம் வாழ்வியல் முறையில், நோய்களும் இன்ஸ்டன்டாக வந்துவிடுகின்றன. ஆனால், 105 வயதிலும் இயற்கை விவசாயம், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், அரசியல் என்று சுறுசுறுப்பாக வலம் வந்துகொண்டிருக்கிறார் பாப்பம்மாள் பாட்டி. அவரைச் சந்திப்பதற்காக, தேக்கம்பட்டியில் உள்ள பாப்பம்மாள் வீட்டுக்குச் சென்றோம். மேகங்கள் படையெடுத்து, மழைக்கு தயாராகிக்கொண்டிருந்தன. மேற்குத் தொடர்ச்சி மலைக் காற்று சிலிர்க்க வைத்தது.br br Reporter - R.Guruprasadbr Video -T.Vijaybr Edit - Nirmalbr Executive Producer - Durai.


User: Pasumai Vikatan

Views: 8

Uploaded: 2021-02-04

Duration: 19:14

Your Page Title