#BOOMINEWS | வேளாண் திருத்த சட்ட மசோதா வாபஸ் பெற வேண்டி மயிலாடுதுறையில் கண்டன ஆர்பாட்டம் |

By : boominews

Published On: 2021-08-09

1 Views

01:06

வேளான் திருத்தம் சட்ட மசோதாக்களை வாபஸ் பெற வேண்டி தொழிற்சங்கங்கள் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை அனைத்து தொழிற்சங்கங்கள் LPF,CITU,AITUC,AICCTU. சார்பில் தொழிலாளர் நல திருத்தச்சட்டம் மின்சார திருத்தச்சட்டம் 3 வேளாண் சட்டங்கள் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டம் இவைகளை திரும்பப் பெறக் கோரி மத்திய பாஜக அரசை கண்டித்து ஏஐடியுசி மாவட்ட கவுன்சில் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறை தனியார்மயம் படுவதை நிறுத்த வேண்டியும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கொரோனா காலகட்டத்தில் ஒரு நபருக்கு 10 கிலோ உணவு தானியம் வீதம் ஆறு மாதங்களுக்கு விலையில்லாமல் வழங்க வேண்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இது போல் மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு SRES தொழிற்சங்கம் சார்பில் ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Trending Videos - 28 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 28, 2024