#BOOMINEWS | எடப்பாடி போல ஸ்டாலினும் சீர்மரபினருக்கு துரோகம் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் சீர்மரபினர் அதிரடி பேட்டி |

#BOOMINEWS | எடப்பாடி போல ஸ்டாலினும் சீர்மரபினருக்கு துரோகம் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் சீர்மரபினர் அதிரடி பேட்டி |

எடப்பாடி போல ஸ்டாலினும் சீர்மரபினருக்கு செய்த துரோகம் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் - சீர்மரபினர் குற்றச்சாட்டு.br br மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 10.5 சதவிகதத்தை ஒரு வன்னியர்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போலவே முதல்வர் ஸ்டாலினும் சீர்மரபினருக்கு துரோகம் இழைத்துவிட்டார் என கூறி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து தங்களது ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீர்மரபினர் நலச்சங்க பொருளாளர் தவமணி பேசுகையில் :., தேர்தலின்போது இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது இட ஒதுக்கீட்டு அறிவிப்பில் எடப்பாடி பழனிச்சாமி போல ஸ்டாலினும் துரோகம் செய்துவிட்டார் எனவும், அதன் தாக்கம் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தலில் இருக்கும் எனவும் குற்றம்சாட்டினர்.br br பேட்டி : தவமணி - பொருளாளர், சீர்மரபினர் நலச்சங்கம்.


User: boominews

Views: 2

Uploaded: 2021-08-16

Duration: 03:21

Your Page Title