#MRVNEWS #கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சி |

#MRVNEWS #கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சி |

கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வளர்பிறை ஐப்பசி மாத சோமவார பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஈஸனுக்கு முன்னர் வீற்றுள்ள அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு, பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சந்தனங்கள் கொண்டும், மலர்கள் கொண்டும் அலங்கரிக்கப்பட்டு விஷேச ஆரத்திகள் நடைபெற்றது. சோடஷசம்ஹாரம் காட்டப்பட்டு, கற்பூர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி,. கும்ப ஆரத்திகள் கொண்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நடைபெற்ற மஹா தீபாராதனையில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் அருள் பெற்றனர். தமிழ் மாதமான ஐப்பசி மாதம் முதல் நாள், சோமவார பிரதோஷம், வளர்பிறை பிரதோஷங்கள் மட்டுமில்லாமல், அனைத்து விஷேசங்களும் ஒன்று கூடியதால் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஈஸ்வரன் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையினரும் சிறப்பாக செய்திருந்தனர்.


User: mrv news

Views: 3

Uploaded: 2021-10-18

Duration: 11:44