#chithiraitv #தமிழக வனப்பகுதிகளை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றது வனத்துறை அமைச்சர் பேட்டி |

#chithiraitv #தமிழக வனப்பகுதிகளை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றது வனத்துறை அமைச்சர் பேட்டி |

தமிழகத்தில் வனப்பகுதிகளை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.br br சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் வன அலுவலர்களுக்கான மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் வனப்பகுதிகளை 33 சதவீதமாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு விலங்குகள் பாதிப்பால் 2922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதற்கான இழப்பீடு கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை.br ஆனால் இந்த ஆண்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனப் பகுதிகளை அதிகரிக்க தனி நிபுணர் குழு மூலம் மண் சார்ந்த மரங்களை வனப் பகுதிகள் முழுவதும் அதிகரிக்க செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வன விலங்குகளுக்கு தேவையான உணவு முறைக்கு ஏற்ப தேவையான உணவுப்பயிர்கள் பயிரிடப்படும் என்றும் தெரிவித்தார். சேலத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கு மையமாக பயன்படுத்தும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பிரச்சினை காரணமாக சுற்றுலா தளங்களை மேம்படுத்தும் பணி தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்பொழுது பிரச்சனை குறைந்த நிலையில் பணிகள் விரைவாக செயல்படுத்தப்படும். எனவும் கூறினார்.


User: chithiraitv

Views: 1

Uploaded: 2021-11-16

Duration: 02:51

Your Page Title