#chithiraitv #தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஊழல் வாதிகள் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேட்டியால் பரபரப்பு ?

#chithiraitv #தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஊழல் வாதிகள் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேட்டியால் பரபரப்பு ?

ஊழல் கரைபடிந்த அதிகாரிகள் 2 ஆட்சிகளிலும் உள்ளனர் என குற்றசாட்டி,மத்திய அரசின் மாற்றுத்திறனாளி முகாம் நடத்துவது வரைக்கும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என ஜோதிமணி பேட்டி:br br கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்த கோரி மாவட்ட ஆட்சியருக்கு ஜோதிமணி பலமுறை வலியுறுத்தியும் முகாம்களை நடத்தாத ஆட்சியரை கண்டித்து எம்.பி ஜோதிமணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில்,கரூர் மாவட்டத்தில் இந்த முகாம்கள் நடத்தாத காரணத்தால் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில். அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் இன்னும் உள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார். பலமுறை வலியுறுத்தியும் கரூர் ஆட்சியர் இந்த முகாமை நடத்த மறுத்து வந்துள்ளனர் எம்பி ஜோதிமணி குற்றஞ்சாட்டினர். br br பேட்டி : ஜோதிமணி - கரூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.


User: chithiraitv

Views: 1

Uploaded: 2021-11-25

Duration: 07:38

Your Page Title