#chithiraitv #ஆத்மா திட்ட ஊழல் முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை வேண்டும் பி.ஆர்.பாண்டியன் |

#chithiraitv #ஆத்மா திட்ட ஊழல் முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை வேண்டும் பி.ஆர்.பாண்டியன் |

ஆத்மா திட்ட ஊழல் முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும், அரசியல் சார்பற்ற விவசாயிகளின் பிரதிநிதிகளை நிர்வாகிகளாக தேர்வு செய்ய தமிழக முதலமைச்சருக்கு பி.ஆர்பாண்டியன் வேண்டுகோள்.. br br தமிழ்நாட்டில் வேளாண் துறையில் ஒதுக்கப்படுகிறது விவசாயிக்கான மான்யநலதிட்ட உதவிகள் 60 சதவீதத்திற்கு மேல் ஊழல் முறைகேடுகள் செய்து அதிகாரிகள் கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர். தற்போது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வேளாண் அலுவலகத்தில் ரூபாய் 24 லட்ச ரூபாயை ஒரே நேரத்தில் கணக்கில் வராத பணமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றி விசாரணை நடந்து வருகிற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு ஒதுக்கப்படுகிறத மானிய விலையிலான உளுந்து,பயறுவகைகள் மற்றும் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்ற இடு பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் தனியார் கடைகளில் மொத்தமாக விற்பனை செய்து ஊழல் முறைகேடு செய்வது தொடர்கிறது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழகம் முழுமையிலும் இதுமாதிரியான ஊழல் முறைகேடுகள் நடைபெற்று வருவதை உணர்ந்து தமிழக அரசுநடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும். மத்திய அரசு மூலம் ஆத்மா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில் ஒதுக்கப்படுகிற நிதி முழுமையும் ஊழல் முறைகேடு செய்கிற நிலை தொடர்கிறது. கடந்த பல ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆத்மா திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிகள் ஒரு ரூபாய் கூட விவசாயிகளுக்காக செலவு செய்யப்படவில்லை. முழு தொகையையும் ஊழல் முறைகேடு செய்திருக்கின்றனர். இதற்கு வாய்ப்பாக மாநில மாவட்ட ஒன்றிய அளவில் அமைக்கப்படும் விவசாயிகள் ஆலோசனை குழுக்களில் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர்களையும், ஊழலுக்கு சாதகமாக தனக்கு வேண்டப்பட்ட நபர்களையும் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் தேர்வுசெய்து விருப்பத்திற்கு ஆத்மா திட்டத்தை ஊழல் முறைகேடு செய்வதை வேளாண்துறை துணிவோடு மேற்கொண்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட ஆத்மா திட்ட நிதி குறித்து தமிழக அரசாங்கம் உயர்மட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை செய்து ஊழல் முறைகேடு செய்தவர்களை தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். புதிய ஆட்சி பொருப்பேற்ற பிறகு தற்போது ஆத்மா திட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி ஒன்றிய,மாவட்ட செயலாளர்களை தற்போது நிர்வாகிகளாக தேர்வு செய்து வருவதாக தெரியவருகிறது. முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அரசியல் சார்பற்ற முறையில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நியமனம் செய்திட முன்வர வேண்டும். காவிரி டெல்டாவில் பத்தாண்டுகளுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வேளாண் அதிகாரிகள் தான் இந்த ஊழலுக்கு முழு துணை போகிறார்கள். இதன் மூலம் வருவாய் ஈட்டும் அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கோ, மாற்று இடங்களுக்கோ பணி மாறுதலில் செல்வதற்கு விரும்பாமல் அரசியல் பிரமுகர்கள் துணையோடு ஒரே இடத்தில் பணி புரிவதால் தான் ஊழல் தீவிரமடைகிறது. இதனை உணர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வேளாண் அதிகாரிகளை உடனடியாக மாநில அளவில் பணி மாறுதல் செய்யப்பட வேண்டும். மறுக்கும்பட்சத்தில் தீவிரமான போராட்டத்தில் களமிரங்குவோம் என எச்சரிக்கிறேன் என்றார். பொட்டாஷ் உரம் உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூபாய் 1040க்கு விற்பனை செய்ய வேண்டிய ஒரு மூட்டை போட்டாஷ் ரூபாய் 1700 க்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதனை மத்திய அரசும் தற்போது அதனையே விலையாக உறுதி செய்திருக்கிறது. இருப்பினும் மிகப்பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகள் பரிதவிக்கிறார்கள்.


User: chithiraitv

Views: 5

Uploaded: 2021-12-11

Duration: 02:52

Your Page Title