கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தை கண்டித்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் தாம்பரம் சண்முகம் சாலையில் பேரணி

கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தை கண்டித்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் தாம்பரம் சண்முகம் சாலையில் பேரணி

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தை கண்டித்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் தாம்பரம் சண்முகம் சாலையில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.br br கர்நாடகா பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணியக்கூடாது என்ற உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் திரும்ப பெற வலியுறுத்தி சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் தாம்பரம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் ஜுனைது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தை கண்டித்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தாம்பரம் சண்முகம் சாலையில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் அப்துல்சமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தமிழ்நாடு முஸ்லீம் மகளிர் பேரவை மாநில பொருளாளர் திருச்சி ஷான்ராணி, உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான முஸ்லீம் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக் தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை ஹிஜாப்புடன் நூற்றுக்கணக்கான பெண்களும் பேரணியாக வந்தனர்.


User: dotcom tamil

Views: 0

Uploaded: 2022-03-19

Duration: 05:39

Your Page Title