இலங்கை பொருளாதார சீரழிவு; தமிழர் நலன் காக்கப்படும்; மஸ்தான்!

இலங்கை பொருளாதார சீரழிவு; தமிழர் நலன் காக்கப்படும்; மஸ்தான்!

கோவை சாய்பாபா காலனி அருகிலுள்ள கே.கே புதூரில் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில், அதன் தலைவர் ஹாஜி முஹம்மது ரபீக் தலைமையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வெளிநாடுவாழ் நலத்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் நலத்திட்ட உதவிகளை (தையல் இயந்திரம், இஸ்திரிபெட்டி, புடவை, உதவித்தொகை) வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மஸ்தான் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் தமிழர் நலம் காக்கப்படும் என தெரிவித்தார்.


User: Tamil Samayam

Views: 1

Uploaded: 2022-03-28

Duration: 03:21

Your Page Title