#karurboomi #சற்றுமுன் #கரூரில் அதிரடி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பு |

#karurboomi #சற்றுமுன் #கரூரில் அதிரடி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பு |

#karurboomi #newsonly #boominews #கரூர் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள எல்.வி.பி நகர் பகுதியில் வசிப்பவர் சரவணன் (வயது 46), இவர் கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டாவிற்கு மாற்ற, நில அளவையர் துறைக்கு முயலும் செல்லும் போது, அங்குள்ள பீல்டு சர்வையரான ரவி (வயது40) என்பவர் இந்த தனிப்பட்டா மாறுதலுக்கு முதலில் ரூ 8 ஆயிரம் கேட்டுள்ளார். இந்நிலையில், அவர் முடியாது என்று கூற, இறுதியில் ரூ 5 ஆயிரம் தான் இறுதி என்று கூறி பணத்துடன் வாருங்கள் உடனே மாற்றித்தருகின்றேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில், கரூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கரூர் தாலுக்கா அலுவலகத்தின் பின்புறம் உள்ள நில அளவைத்துறையில் பகிரங்கமாக லஞ்சம் கேட்கின்றார்கள், என்று முன்னாள் ராணுவ வீரர் சரவணன் முறையிட, லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி நடராஜன் தலைமையிலான போலீஸார், முன்னாள் ராணுவ வீரரை பணத்துடன் செல்ல சொல்லி, பின்புறம் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இதே போல, கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டா மாற்றம் எத்தனை நடந்துள்ளது, யார், யாரிடம் எவ்வளவு வாங்கியுள்ளார். இவரிடம் வாங்கிய பணம் இவருக்கு மட்டும் தானா ? மேல் அதிகாரிகள் யாரேனும் உள்ளனரா ? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


User: karurboomi

Views: 7

Uploaded: 2022-04-25

Duration: 02:12

Your Page Title