#cithiraitv #பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு புலவர்கள் நினைவுத் தூணிற்கு மலர் மரியாதை |

#cithiraitv #பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு புலவர்கள் நினைவுத் தூணிற்கு மலர் மரியாதை |

#cithiraitv #சித்திரை டிவி #பாவேந்தர் பாரதி தாசனின் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் புலவர்கள் நினைவுத் தூணிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.br br கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாவேந்தர் பாரதி தாசனின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கருவூர் புலவர்கள் பன்னிருவர் நினைவுத் தூணிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மாலை அணிவித்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகளும், தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு தமிழ் ஆர்வலர்கள், புலவர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வழங்கினர். கரூர் என்ற பெயரை கருவூர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கரூரில் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.


User: chithiraitv

Views: 1

Uploaded: 2022-04-29

Duration: 03:08

Your Page Title