எப்பவும் எடுக்கறவனவே இருக்காதிங்க, அதுக்கும் கொஞ்சம் குடுக்கறவன இருங்க || Rana

எப்பவும் எடுக்கறவனவே இருக்காதிங்க, அதுக்கும் கொஞ்சம் குடுக்கறவன இருங்க || Rana

இவ்வுலக வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் அத்தியாவசியமானது நல்ல உடல் நலமும் மனநலமும் தான். ஏழையாய் இருப்பவன் நன்கு பணம் சம்பாதித்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்ளவும், செல்வம் மிகுந்தவன், அந்த செல்வத்தை அனுபவிக்கவும் முழுமையான உடல்நலம் அவசியம். இப்படிப்பட்ட உன்னதமான உடல்நலத்தை, காசு கொடுத்து கடையில் வாங்க முடியாது. உடல்நலம், மனநலம் என்னும் இரண்டு அம்சங்களும் இயற்கை விதிகளின்படி, வாழ்க்கை முறையை பின்பற்றி பெறப்படுபவை. br br ஆனால், இந்த விஞ்ஞான உலகத்தில் மனிதன் விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்பட்டிருக்கும் வசதிகளை அனுபவித்துப் பழகி விட்டான். அதனால் எல்லாவற்றையும் விஞ்ஞானத்தால் அடைந்து விட முடியும் என்ற மயக்கத்தில் திளைக்கிறான். இப்படி சகல துறைகளிலும் அறிவியல் மனிதனின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த, அந்த அறிவியல் அனைத்துக்கும் நிரூபணங்கள் கொடுப்பதே காரணம். br br விஞ்ஞானம் வளர்ந்து எவ்வாறு மனித சமுதாயத்திற்குப் பல நன்மைகளை வழங்கிக் கொண்டிருப்பது உண்மையோ, அதுபோல அது பல மடங்கு தீமைகளையும் விளைவித்துக் கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது. மனிதன், அறியாமையால் முழுமையாகத் தன்னை விஞ்ஞானத்திடம் அடகு வைத்துவிட்டான். அவன் இந்த அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, விழிப்புணர்வு பெற்று, விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் தீமைகளிலிருந்து விலகி, அதன் ஒளிமயமான வளர்ச்சியை மட்டும் வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள பழக வேண்டும். br br இவ்வாறு செய்வதனால், அவன் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் கொடுக்கும் அறிவியலிலிருந்து விலகி, நன்மையை மட்டுமே கொடுக்கும் மெய்ஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கை வாழ்வியலை மேற்கொள்வான். அதன் மூலம் அவனது வாழ்க்கையில் உடல்நலம், மனநலம், மனிதாபிமானப் பண்பு ஆகியவை மேலோங்கி வளரும்.


User: Balmy Tunes

Views: 5

Uploaded: 2022-07-13

Duration: 05:48

Your Page Title