ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர்; சொத்துமதிப்பு என்ன தெரியுமா?

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர்; சொத்துமதிப்பு என்ன தெரியுமா?

ஒரு வாரத்துக்கு முன்பாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த கவுதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின. 4,400 மோடி டாலர்களை (சுமார் ரூ.3.60 லட்சம் கோடி) இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டாலர்களுடன் (சுமார் ரூ.6.14 லட்சம் கோடி) தற்போது 15-வது இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டாலர்கள் (சுமார் ரூ.6.84 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.br br இந்த நிலையில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கவுதம் அதானி, அந்த இடத்தை இழந்தார். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த அம்பானி, அதானி நிறுவனத்தின் திடீர் வளர்ச்சி காரணமாக பின்னுக்குத் தள்ளப்பட்டார். இந்த நிலையில், தற்போது மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார்.br br Website: Facebook : Twitter : Sharechat : Instagram.


User: kamadenudigital

Views: 1.2K

Uploaded: 2023-02-03

Duration: 01:33

Your Page Title